Enable Javscript for better performance
திருமானூரில் அரசு பேருந்துகள் மோதல்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், திருமானூரில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. பேருந்துகள் மெதுவாக வந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
    அரியலூரிலிருந்து வியாழக்கிழமை பிற்பகல் பயணிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சைக்கு ஒரு அரசு பேருந்தும், அதே நேரத்தில் தஞ்சையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரியலுருக்கு ஒரு அரசு பேருந்தும் புறப்பட்டது.
    இந்த 2 பேருந்துகளும் திருமானூர் எல்லையில், கொள்ளிடம் பால முகப்பில் வந்தபோது, அங்கே வைக்கப்பட்டிருந்த தடுப்புஅரணை (பேரிகார்டு) கடக்கும் போது, எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.இரு பேருந்துகளும் மெதுவாக வந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. ஆனால், பேருந்துகளின் முகப்புக் கண்ணாடிகள் உடைந்தன. பேருந்துகளில் பிரேக், ஒலிப்பான்(ஆரன்) சரியாக இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், விபத்து நடக்கும் இடங்களில் தொடர்ந்து தடுப்பு அரண் வைக்கப்படுவதால், அதைக் கடக்கும் வாகனங்கள் பெரும்பாலும் விபத்தில் சிக்குகின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai