Enable Javscript for better performance
பள்ளி மூடப்பட உள்ளதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அருகே அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி மூடப்படவுள்ளதை கண்டித்தும், அந்தப் பள்ளியே அரசே ஏற்று நடத்த வலியுறுத்தியும் மாணவ,மாணவிகள் அவர்களின் பெற்றோர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    விக்கிரமங்கலம் அருகேயுள்ள சுந்தரேசபுரம் கிராமத்தில் 1965-ம் ஆண்டு முதல் செயல்படும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர்.
    இந்நிலையில் பள்ளிக் கட்டடம் பழுதடைந்துள்ளதாகக் கூறி பள்ளியை மூட கல்வி துறை நடவடிக்கை எடுத்து வருவதுடன், மாணவர்களை மாற்றுச்சான்றிதழ் பெற்று வேறு பள்ளியில் சென்று சேர்ந்து கொள்ள கடந்த சில வாரங்களாக வலியுறுத்தி வருகிறதாம்.
    இதையடுத்து தற்போது பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் வேறு பள்ளிக்கு செல்ல நீண்ட தூரம் செல்ல வேண்டும். எனவே, பள்ளியை மூடக்கூடாது, பள்ளியை சீரமைத்து அரசே பள்ளியை எடுத்து நடத்த வேண்டுமெனக்கூறி மாணவ,மாணவிகள், அவர்களின் பெற்றோர் வியாழக்கிழமை பள்ளி முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்து வந்த தா. பழூர் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் கலியபெருமாள், விக்கிரமங்கலம் போலீஸார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை மனுவாக எழுதிக் கொடுங்கள். சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, மனுவை எழுதி கொடுத்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai