Enable Javscript for better performance
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்புக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை கேட்புக் கூட்டத்தில் 225 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா பெற்றுக்கொண்டார்.
    கூட்டத்துக்கு அவர் தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
    மேலும் அவர், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேசிய அடையாள அட்டையை பெற்று தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.
    பின்னர், பாரா விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான குண்டு எறிதல், தட்டு எறிதல் ஆகிய போட்டிகளில் முற்றிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் முதலிடம் பெற்று, தங்கம் வென்று, உலக அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தேர்வாகி, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் நடைபெறும் ஆசியக்கோப்பை பாரா விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். சிவகாமி என்ற மாற்றுத்திறனாளியை பாராட்டினார்.
    கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, துண்டுப் பிரசுரங்கள் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்பட்டது.
    மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர். பாலாஜி, துணை ஆட்சியர் ஜெ.பாலாஜி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜெ. ஜெயராணி, மாவட்ட சமூக நல அலுவலர் ப.பூங்குழலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai