Enable Javscript for better performance
மாவட்ட ஹாக்கி போட்டியில் வென்ற அணிக்கு பரிசளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் வென்ற அணிகளுக்கு புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
    கடந்த 4 முதல் 7 ஆம் தேதி நடைபெற்ற இந்த போட்டியில், பசுபதி மெமோரியல் வளைகோல்பந்து கழகம், வித்யாமந்திர் ஹாக்கி அணி, அரசு மேல்நிலைப்பள்ளி, அரியலூர், அரசு நகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அரியலூர், உள்ளிட்ட 10 ஹாக்கி அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பெற்ற பசுபதி ஹாக்கி கழகத்துக்கும், 2-ம் இடத்தைப் பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளி (விளையாட்டு விடுதி ஹாக்கிஅணி) அணிக்கும் பரிசுகள் வழங்கும் விழா புதன்கிழமை மாலை விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. வருவாய்க் கோட்டாட்சியர் மோகனராஜன் பங்கேற்று பரிசு,சான்றிதழ்களை வழங்கினார்.
    மாவட்ட ஹாக்கி சங்க துணைப் பொருளாளர் குணசேகரன் போட்டியைத் தொடக்கி வைத்தார். நடுவர்களாக மகேஷ்பாபு, தர்மலிங்கம், ஜபருல்லா, ராமச்சந்திரன் ஆகியோர் செயல்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai