Enable Javscript for better performance
108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் காந்திபூங்கா முன் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    108 ஆம்புலன்ஸ் சேவையை நிர்வகித்துவரும் ஜிவிகேஈஎம்ஆர்ஐ நிர்வாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் 2017ம் ஆண்டுக்கான வருடாந்திர ஊதிய உயர்வுக்கும், ஈட்டிய விடுப்புக்கும் தமிழக அரசு வழங்கிய பணத்தை முறையாக முழுமையாக வழங்காததை கண்டித்தும், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சங்கத்தின் மாவட்டத் தலைவர் திருமாறன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை மாவட்டச் செயலர் சரவணன் விளக்கினார். ஆர்ப்பாட்டத்தை துணைத் தலைவர் வெள்ளிவேல் தொடக்கிவைத்தார்.
    பொருளாளர் செந்தில்குமார், மண்டலக் குழு உறுப்பினர் ரவி, நிர்வாகிகள் ராஜேந்திரன், பிரேம், குணசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ராஜசேகர் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai