Enable Javscript for better performance
அரியலூரில் மார்ச் 28-இல் மாவட்ட விளையாட்டுப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் மார்ச் 28ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
    இதில் தடகளம், நீச்சல், வாலிபால் மற்றும் கபடி ஆகிய விளையாட்டு போட்டிகள் இருபாலருக்கும் தனித்தனியாக நடத்தப்பட உள்ளது. வயது வரம்பு ஏதுமில்லை. வீரர், வீராங்கனைகளுக்கு தடகளப் போட்டியில் 100 மீ, 400 மீ, 1,500 மீ ஓட்டப் பந்தயங்களும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெறும்.
    நீச்சல் 50 மீ, 100 மீ, 200 மீ, 400 மீ, ப்ரீ ஸ்டைல் 50 மீ, பேக் ஸ்ட்ரோக் 50 மீ, பிரஸ்ட் ஸ்ட்ரோக் 50 மீ, பட்டர் பிளை 200 மீ , இன்டிவிஜுவல் மிட்லே ஆகிய போட்டிகள் இருபாலருக்கும் நடைபெற உள்ளது. வெற்றியாளர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.
    பள்ளி. கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்(பொ) ம. ராமசுப்ரமணியராஜா தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai