Enable Javscript for better performance
உளுந்து பயிருக்கு இழப்பீட்டுத் தொகை கோரிஅரியலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உளுந்து பயிருக்கு இழப்பீட்டுத் தொகை கோரிஅரியலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 24th March 2018 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த 2017-18 ஆம் ஆண்டு உளுந்து பயிருக்கு காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இதுவரை காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்தும், அதனை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர், உளுந்து பயிரை சாலையில் கொட்டி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ. விசுவநாதன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜெ.பரமசிவம், செயலர் ராமலிங்கம், உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், ராஜீ, செழியன், ஸ்ரீபுரந்தான் சக்கரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai