Enable Javscript for better performance
கற்கும் பாரதம்: நாளை அடிப்படை எழுத்துத்தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ், அரியலூர் மாவட்டத்தில் அடிப்படை எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 25) நடைபெற உள்ளது என்றார் ஆட்சியர் மு.விஜயலட்சுமி.
    அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கற்கும் பாரதம் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் 15 வயதுக்கு மேல் 80 வயதுக்குள் எழுத, படிக்கத் தெரியாதவர்கள் அனைவருக்கும் இத்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வில், அரியலூர் மாவட்டத்தில் 3614 பயனாளிகள் தேர்வு எழுத உள்ளனர்.
    இத்தேர்வானது அரியலூர், திருமானூர், செந்துறை, தா.பழூர், ஜயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இத்தேர்வை, கற்கும் பாரத மையத்தில் படித்தவர்களும், மையத்தில் படிக்காதவர்களும் எழுதலாம். மேலும், கடந்த முறை தேர்வில் தேர்ச்சியடையாதவர்களும் பங்கேற்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai