Enable Javscript for better performance
வழக்குரைஞர்கள் 6ஆவது நாளாக போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் கட்ட வலியுறுத்தி, அரியலூரில் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து வழக்குரைஞர்கள் சங்கத்தினர் 6 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 16 ஆம் தேதி முதல் வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழையும் அவர்கள், நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, பேருந்து நிலையம் அருகே மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    போராட்டத்தில் அரசு ஒதுக்கிய நிலத்தில் உடனடியாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    அதற்கு உடனடியாக தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர். சங்கத் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai