Enable Javscript for better performance
விஷம் குடித்த கிராம உதவியாளர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள ஸ்ரீபுரந்தான் கொட்டாய் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன்(48). நடுவலூர் பகுதியில் கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களாக இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்த இவர், கடந்த19 ஆம் தேதியன்று வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்துள்ளார்.
    இதையறிந்த அவரது மனைவி செல்வி(38), குணசேகரனை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர், மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குணசேகரன் அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai