Enable Javscript for better performance
கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அரியலூர் மா வட்டம் கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. 
    இக்கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது. கடந்த 27-ம் தேதி இரவு சுவாமிகளுக்கு திருக்கல்யாணமும், முத்து பல்லக்கில் சுவாமிகள் வீதியுலாவும் நடைபெற்றது.
    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக அன்று மாலை சுவாமிகளுக்கு மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியப் பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பெரிய தேரில் உற்சவமூர்த்திகளான அருந்தவநாயகி உடனாய ஆலந்துறையாரும், மற்றொரு தேரில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், அம்பாள், வள்ளி தெய்வானை சமேத முருகன், மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அமர வைக்கப்பட்டு, நாதஸ்வர இன்னிசையுடன் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் வீடுதோறும் மாவிளக்கு போட்டு வழிபட்டனர். முக்கிய வீதிகளின் வழியாக வந்த தேர் நிலையை அடைந்தது. விழாவில் வெள்ளிக்கிழமை நடராஜர் தேர் காணல் பார்த்தல் உற்சவம் நடைபெற்றது. மதியம் யாகசாலை கலச அபிஷேகம், இரவு கொடியிறக்கம் நடைபெற்றது. விழாவில் சுற்றுப்புற கிராம பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai