Enable Javscript for better performance
ஜயங்கொண்டம் அருகே மகள் பலாத்காரம்: தந்தை கைது- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மகளை பலாத்காரம் செய்தவரை ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வியாழகிழமை இரவு கைது செய்தனர்.
    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள பாகல்மேடு கிராமத்தை சேர்ந்த த. சிவலிங்கம் (48). இவரது மகள் எட்டாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் ஆடுமாடு மேய்த்துக்கொண்டிருந்தார். கடந்த ஜன.17-ல் அதே ஊரில் உள்ள ஒரு சவுக்குத் தோப்பில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த சிவலிங்கம் தனது மகளை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார். 
    இந்நிலையில் வியாழக்கிழமை இரவு  சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை என அவரது தாய் ராஜேஸ்வரி ஜயங்கொண்டம் மருத்துவமனையில் அழைத்துச் சென்றார்.  அங்கு பரிசோதித்த மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாகக் கூறியதையடுத்து தாய் தனது மகளிடம் விசாரித்த போது இதற்கு தந்தைதான் காரணம் எனக் கூறினார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சந்திரகலா வழக்கு பதிந்து சிவலிங்கத்தை கைது செய்து விசாரிக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai