Enable Javscript for better performance
பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    அரியலூர் அலந்துறையார் கோயில் சன்னதியிலுள்ள முருகன் கோயிலிலும் ,பெரம்பலூர் சாலையிலுள்ள பாலசுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 
    செந்துறை நெய்வனத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த செல்வசுப்ரணியர் திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாணமும், சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது. 
    முன்னதாக வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானுக்கு பால், தயிர், தேன், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வள்ளி,தெய்வானையுடன் கூடிய முருகபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    இதேபோல திருமழபாடி, கீழப்பழுவூர், பொன்பரப்பி, ஆண்டிமடம்,ஜயங்கொண்டம், மீன்சுருட்டி, தா. பழூர் உள்ளிட்ட பகுதி சிவன் கோயில் சன்னதியிலுள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்,ஆராதனை நடைபெற்றது.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai