Enable Javscript for better performance
புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை- Dinamani

சுடச்சுட

    

    புனித வெள்ளியை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் வெள்ளிக்கிழமை சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
    இயேசு கிறிஸ்து சிலுவைப்பாடுகளை சுமந்து உயிர்நீத்த தினத்தை புனித வெள்ளி தினமாகவும், இயேசு கிறிஸ்து 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பண்டிகை எனவும் கிறிஸ்தவர் அனுசரிக்கின்றனர். இதையொட்டி பிப். 10 முதல் தொடர்ந்து 40 நாள்கள் கிறிஸ்தவர்கள் விரதமிருந்தனர். வெள்ளிக்கிழமை கிறிஸ்து உயிர்நீத்த நாளையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிறிஸ்த தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி,ஆராதனைகள் நடைபெற்றன.
    அரியலூர் புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை அந்தோனி சாலமோன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 
    இதேபோல் அரியலூர் புதுமார்க்கெட் வீதியிலுள்ள சி.எஸ்.ஐ. தூய ஜார்ஜ் ஆலயத்தில் அருட்தந்தை ராஜசேகரன் தலைமையிலும், ஏலக்குறிச்சி புனித அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை சுவக்கின் தலைமையிலும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. 
    இதேபோல வரதராஜன்பேட்டை, செந்துறை,திருமானூர்,ஆண்டிமடம்,ஜயங்கொண்டம்,மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ல ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் கிறிஸ்தவர்கள் சிலுவை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai