Enable Javscript for better performance
23 அடி உயர பாலமுருகன் சுவாமி சிலைக்கு குடமுழுக்கு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அருகே அஸ்தினாபுரம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 23 அடி உயர பாலமுருகன் சுவாமி சிலைக்கு வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
    விழாவை முன்னிட்டு,கடந்த 29 ஆம் தேதி மாலை மங்கள இசையுடன் கணபதி வழிபாடு, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு மேல், மங்கள இசை, கோபூஜை, பிம்புசுத்தி நாடி சந்தனம் மற்றும் மேளதாளங்களுடன் கடம் புறப்பாடு, தொடர்ந்து, காலை 9 மணிக்கு மேல் பாலமுருகன் சிலை, கோயிலுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. பக்தர்கள் அரோகரா கோஷங்கள் எழுப்பினர்.  நிகழ்ச்சியில் அஸ்தினாபுரம் மற்றும் அரியலூரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசனம்  செய்தனர்.  தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai