Enable Javscript for better performance
கூட்டுப் பண்ணைய பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் வட்டார வேளாண் துறை மூலம் (அட்மா) கூட்டுப் பண்ணையம் குறித்த பயிற்சி வீரசோழபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
    பயிற்சிக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநர்அலுவலக வேளாண்மை உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு)  விஜயலட்சுமி தலைமை வகித்தார். ஜயங்கொண்டம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) விஜயலட்சுமி பேசுகையில், மண் வளத்தைப் பாதுகாக்க மண் ஆய்வு முடிவுகளின்  தேவையான உரமிடுதல் அவசியம் என்றார். வேளாண் உதவி இயக்குநா ராஜேந்திரன் விவசாய ஆர்வலர் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், பண்ணைக் கருவிகளை பயன்படுத்தும் விதம் குறித்து விளக்கமளித்தார். முன்னதாக வட்டார தொழில் நுட்ப மேலாளர்மீனாட்சி அனைவரையும் வரவேற்றார். உதவி தொழில்நுட்ப மேலாளர் முருகன் நன்றி கூறினார். சுற்று வட்டார விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai