Enable Javscript for better performance
தொழில் தொடங்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க விரும்புவோர் மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம் என ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்தார். 
    இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்திற்கு 2018-19 நிதியாண்டில் 15 தொழில் முனைவோர்கள் நிதி உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தொழில் மையம் மூலம் 12 தொழில்முனைவோர்களுக்கு ரூ.120.00 லட்சம் மானியம் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் 3 தொழில் முனைவோர்களுக்கு ரூ.30 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த புதிய தலைமுறையை சார்ந்த தொழில் முனைவோர்கள்  h‌t‌t‌p://‌w‌w‌w.‌m‌s‌m‌e‌ o‌n‌l‌i‌n‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.  ஆட்சியர் அவர்களைத் தலைவராகக் கொண்டு இயங்கும் மாவட்ட அளவிலான தேர்வுக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு தொழில் முனைவோர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai