Enable Javscript for better performance
மதுக்கடை பூட்டை உடைத்து திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள அரசு மதுக்கடையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களைத் திருடிச்சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
    திருமானூர் அருகேயுள்ள இலந்தைகூடம் - அரண்மனைக்குறிச்சி சாலை வயல் பகுதியில் அரசு மதுக்கடை இயங்கி வருகிறது.  இந்தக்கடையில் விற்பனையாளராக அன்பழகன்,
    மேற்பார்வையாளராக வெங்கடாசலம் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும், புதன்கிழமை இரவு பணி முடிந்து வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில், வியாழக்கிழமை காலை மதுக்கடை  பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்ட பொதுமக்கள், திருமானூர் காவல் நிலையம், விற்பனையாளர் ஆகியோருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற திருமானூர் போலீஸார் மற்றும் டிஎஸ்பி சிவமணி ஆகியோர் மதுக் கடையை ஆய்வு செய்தனர். விசாரணையில், மதுக்கடையில் இருந்த தலா 48 குவாட்டர் மது பாட்டில்கள் அடங்கிய 80 மதுபானப் பெட்டிகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம். மதுக்கடையை மாவட்ட மேலாளர் ராஜேந்திரன் பார்வையிட்டார். இதுதொடர்பாக திருமானூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai