Enable Javscript for better performance
"மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் அதிருப்தி'- Dinamani

சுடச்சுட

    

    மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்றார் திமுக மாவட்ட கழக செயலாளர் சிவசங்கர்.
    அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் இளைஞர் எழுச்சிநாளையொட்டி, நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம்  புதன்கிழமை இரவு நடைபெற்றது.  கூட்டத்திற்கு நகர பொருளாளர் காசிநாதன் தலைமை வகித்தார். 
    நகர கழக செயலாளர் கருணாநிதி, ஒன்றிய கழக செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    கூட்டத்தில் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியது: தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, தொடர் போராட்டங்கள் தான்  நடைபெற்று வருகிறது. மத்தியில் ஆளும் பாஜகவின் கைப்பாவையாக எடப்பாடி உள்ளார். அதிமுக அரசு வளர்ச்சித் திட்டங்களைப் பற்றி யோசிப்பதில்லை.   விவசாயிகள், மாணவர்கள், பாமரர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோரைப் பற்றி கவலையில்லை. மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்றார். 
    கூட்டத்தில்  தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், தில்லை.காந்தி, மாவட்ட பொருளாளர் பொய்யாமொழி, மாவட்ட துணை தலைவர் கணேசன், பொதுக்குழுஉறுப்பினர் எம்.பி.பாலசுப்பிரமணியன், தலைமை கழக பேச்சாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாற்றுக்கட்சியில் இருந்து திமுகவில் பலர் இணைந்தனர். முன்னதாக நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் வரவேற்றார். முடிவில் நகர வர்த்தக அணி அமைப்பாளர் பிரபு நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai