Enable Javscript for better performance
வன்கொடுமை தடுப்பு சட்டம்: அரியலூரில் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வன்கொடுமை தடுப்புச் சட்டங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி, அரியலூர் பேருந்து நிலையம் அருகே தலித் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
    வன்கொடுமை சட்டத்தை அரசியல் சாசனத்தின் 9 ஆவது அட்டவணையில் சேர்க்க வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப் போவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து, பிரதான சாலை  வழியாக பேரணியாகச் சென்று ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம் மனு அளித்துவிட்டு சென்றனர். 
    ஆர்ப்பாட்டம், பேரணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் பெ.மு. செல்வநம்பி தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலர் கி. இளமாறன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் சா.சின்னதுரை, தமிழக அனைத்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சி.ரா.அம்பேத்கர்வழியன், பழங்குடி இருளர் பேரவைத் தலைவர் இருளபூ செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai