Enable Javscript for better performance
3 ஆம் நாள் ஜமா பந்தி:  405 மனுக்களுக்கு தீர்வு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் 3 ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சியில் (ஜமாபந்தி) 405 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டன.     
    அரியலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி (ஜமாபந்தி) தொடங்கியது. தொடர்ந்து 3 ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்றது. 
    அரியலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 283  மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 197 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டன. 52 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. 34 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 
    உடையார்பாளையத்தில் 122 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. 46 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 
    செந்துறையில் 86 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டன. 237 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 50 மனுக்கள் தள்ளுபடியாகின.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai