மேலப்பழுவூரில் கூட்டுப்பண்ணையப் பயிற்சி

அரியலூர் மாவட்டம், மேலப்பழுவூர் கிராமத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) சார்பில்

அரியலூர் மாவட்டம், மேலப்பழுவூர் கிராமத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) சார்பில் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின்கீழ் கூட்டுப்பண்ணையம் குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாண் துணை அலுவலர் ஞா. பால் ஐட்ன்சன், மக்காச்சோளம் சாகுபடி முறைகள் மற்றும் தற்போது மக்காச்சோளத்தில் ராணுவ படைப்புழுவால் ஏற்படும் சேதங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ள இமாமெக்டின் பென்சோயேட் மருந்து தெளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.
வேளாண் உதவி அலுவலர் க. ராதா, பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் குறித்தும், நெல் சாகுபடி செய்யவுள்ள விவசாயிகள் இந்தக் காப்பீடு திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ. 433-ஐ  பொதுச் சேவை மையம் அல்லது தொடக்ககூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ செலுத்தி பயன்பெற வேண்டும் என விவசாயிகளிடம் தெரிவித்தார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் ந. கலைமதி,அட்மா திட்டம் மற்றும் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார். பயிற்சியில் வேளாண் உதவி அலுவலர் சு. மகேந்திரன்,உதவி தொழில்நுட்ப வல்லுநர் பி. அன்பழகன் மற்றும் விவசாய ஆர்வலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com