கட்டுமான தொழிலாளர் சங்கக் கூட்டம்

இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அரியலூரில் நடைபெற்றது. 

இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அரியலூரில் நடைபெற்றது. 
கூட்டத்தின்போது, நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: மணல் கொள்ளையைத் தடுத்து மணல் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 50 வயது நிறைவுற்ற கட்டுமான பெண் தொழிலாளர்கள் அனைவருக்கும் மனு அளித்த மாதத்தில் இருந்து ரூ. 3ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலில் ஈடுபடும்போது ஏற்படும் விபத்தில் மருத்துவமனை சிகிச்சையின்போது உயிரிழப்போருக்கும் இழப்பீடு வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் சேப்பெருமாள் தலைமை வகித்தார். மாணவர் அமைப்பு மாவட்டச் செயலர் துரைஅருணன்,, கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலர் துரைசாமி ஆகியோர் பேசினர். முடிவில், அப்பாசாமி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com