கோ-கோ போட்டியில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முதலிடம்
By DIN | Published on : 16th September 2018 03:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கோ-கோ விளையாட்டில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி அணி முதலிடம் பெற்றது.
அரியலூர் மாவட்டம் விளாங்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான 14ஆவது கோ-கோ போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுக் கழகம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில்
6 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, துறையூர் கரட்டாம்பட்டி ஜெயராம் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியை தோற்கடித்து முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம், மண்டலங்களுக்கு இடையிலான கோ-கோ போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
அதேபோல, மூன்றாமிடத்துக்கு நடைபெற்ற போட்டியில் திருச்சி கே. ராமகிருஷ்ணன் தொழில் நுட்ப கல்லூரி, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப கழக கல்லூரியை வென்றது.