கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு முகாம்
By DIN | Published On : 04th April 2019 08:16 AM | Last Updated : 04th April 2019 08:16 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூட்டுறவுச் சங்கம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாணவிகள் கல்லூரியின் முகப்பில் சிவிஐஜிஐஎல் (இயஐஎஐக) அடையாளத்தை வரைந்து, அதன் மாதிரி நின்று உறுதியேற்றனர்.
கூட்டுறவுச் சங்க மண்டல இணைப்பதிவாளர் வ.சி. கோமதி, சிவிஜில் செயலியின் பயன்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார்.
அரியலூர் சரகத் துணைப் பதிவாளர் கே.கே. செல்வராஜ், கண்காணிப்பாளர் இளஞ்செழியன், கல்லூரி துணை முதல்வர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.