வேட்பாளர்களின் செலவின பதிவேடுகள் 2 ஆம் கட்ட ஆய்வு
By DIN | Published On : 11th April 2019 08:26 AM | Last Updated : 11th April 2019 08:26 AM | அ+அ அ- |

சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினப் பதிவேடுகள் மற்றும் கணக்கு அறிக்கைகளின் மீதான இரண்டாம் கட்ட ஆய்வுகள் தேர்தல் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் தேசிய, மாநில அளவிலான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் கணக்குகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் கணக்குகள், இதர வேட்பாளர்களின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. தேர்தல் செலவினங்களை தேர்தல் ஆணை செலவின பார்வையாளர்கள் துர்காதத் மற்றும் மனோஜ்குமார் பந்தோகி ஆகியோர் சரிபார்த்தனர்.
அப்போது, நடைபெற்ற ஆய்வுகளில் 5 வேட்பாளர்கள் சார்பில் செலவினக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பங்கேற்காத வேட்பாளர்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். உரிய விளக்கங்கள் அளிக்காதவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மூன்றாம் கட்ட ஆய்வு வரும் 15ஆம் தேதி ஆட்சியரகத்தில் நடைபெறும் எனத் தெரிவித்தனர். நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் தா. பரிதாபானு (பொது), கணேஷ்குமார் (கணக்கு) மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.