அதிமுக கூட்டணி ஒப்பந்தக் கூட்டணி: தொல்.திருமாவளவன்

எட்டுவழிச் சாலை திட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும்

எட்டுவழிச் சாலை திட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் முரண்பட்டுப் பேசியிருப்பது அதிமுக கூட்டணி ஒப்பந்தக் கூட்டணி என்பதைக் காட்டுகிறது என்றார் தொல்.திருமாவளவன்.
        சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியின் வேட்பாளரும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன், அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் மற்றும் தா.பழூர் ஒன்றியங்களில் உள்ள துளாரங்குறிச்சி, கட்சிப்பெருமாள், சோழன்குறிச்சி, வாணதிரையன்பட்டினம், மிக்கேல் பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தேர்தல் பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியது: 
எட்டு வழிச்சாலையை கடுமையாக எதிர்ப்பதாக சொல்லும் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையிலேயே எட்டு வழி சாலை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதிலிருந்து அந்தக் கூட்டணி ஒப்பந்த அடிப்படையில் உருவான கூட்டணி,  பொருந்தாத கூட்டணி என்பதும் தெளிவாகிறது. அரியலூர் மாவட்டத்தில் ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்கு நிலம் கொடுத்த 13 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பது நிரந்தரத் தீர்வாகாது. யார் நமக்கு உற்ற துணையாக இருப்பார்கள் என மக்கள் நினைக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். நான் அந்த வாக்குறுதியைத் தர விரும்புகிறேன். தேர்தல் புறக்கணிப்பைக் கைவிட்டு பானை சின்னத்தில் வாக்களியுங்கள். மக்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றப் பாடுபடுவேன். பாதுகாப்பான முறையில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக காவல் துறைக்கும் வேண்டுகோளாக வைக்கிறேன் என்றார். 
       பிரசாரத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com