சுடச்சுட

  


  அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் நிகழாண்டு இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகத்தை கல்லூரி முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.
  நிகழாண்டில், இளங்கலை தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், கணிதம், வணிகவியல், புள்ளியியல், விலங்கியல், இயற்பியல் ,வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் மே 2 வரை விநியோகிக்கப்படுகிறது.
  எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் தங்களது சாதிச் சான்றிதழைக் காண்பித்து, விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். மற்ற பிரிவினர் ரூ.50 செலுத்தி விண்ணப்பங்கள் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 2 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 
  மேலும் விவரங்களுக்கு 04329-222050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai