கல்லூரி மாணவி மாயம்
By DIN | Published On : 23rd April 2019 08:51 AM | Last Updated : 23rd April 2019 08:51 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள சூசையப்பர் பட்டினத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி மகள் செல்சியா(19). ஜயங்கொண்டத்திலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த இவர், கடந்த 2 தினங்களுக்கு முன் தனது தாத்தா வீட்டுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிச் சென்றவர்,அதன்பிறகு வரவில்லை. பல இடங்களிலும் தேடியும் அவர் கிடைக்காததால் அவரது தந்தை அந்தோணிசாமி ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.