லாரி மோதி தொழிலாளி சாவு
By DIN | Published On : 26th April 2019 05:18 AM | Last Updated : 26th April 2019 05:18 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம், காட்டுபிரிங்கியம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற கூலித் தொழிலாளி லாரி மோதி உயிரிழந்தார்.
மெய்க்காவல் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் சரவணன்(40), கூலித்தொழிலாளி. வியாழக்கிழமை இவர் இருசக்கர வாகனத்தில் அரியலூருக்கு காட்டுபிரிங்கியம் அருகே சென்றபோது எதிரே ஜல்லி கற்கள் எற்றி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கயர்லாபாத் போலீஸார் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநர் பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த நாராயணன் மகன் கோடீஸ்வரனை கைது செய்தனர்.