முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சிமாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி
By DIN | Published On : 04th August 2019 03:37 AM | Last Updated : 04th August 2019 03:37 AM | அ+அ அ- |

அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம், ஆண்டிமடம் அம்மா தொண்டு நிறுவனம், தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு, ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை இணைந்து சுயம்வரம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு 51 வகை சீர்வரிசைகள், புதிய துணி மணி ரகங்கள், அரசு பதிவு திருமணச் சான்று, 2 கிராம் தங்கத் தாலி, 2 மாதத்துக்கான மளிகை சாமான்கள் வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட மணமகள், மணமகனுக்கு சென்னையில் 13.10.2019 அன்று கலந்தாய்வு நடத்தப்பட்டு,18.11.2019 அன்று திருமணம் செய்து வைக்கப்படுகிறது. முன்னதாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் டி.ஜி.வினய் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் நா.சத்தியநாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் (பொ) ச.காமாட்சி, ஆண்டிமடம் அம்மா தொண்டு நிறுவன செயலர் சண்முகம், மாவட்ட தலைவர் பழனியாண்டி, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் சிம்மச்சந்திரன் மற்றும் மாற்றத்திறகாளிகள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.