அரியலூர் ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிவது எப்போது?

அரியலூர் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அரியலூர் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூரில் இருந்து பெரம்பலூர், துறையூர், சேலம், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பிரதான சாலையாக விளங்குவது பெரம்பலூர் சாலை. இச்சாலையில் பிரதான கடைவீதி, அரசு தலைமை மருத்துவமனை, பல்வேறு குடியிருப்புகள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரிகள், வியாபார நிறுவனங்கள், சிறு, குறு தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன. இந்த சாலை இடையே ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டைக் கடந்து தான் தென் மாவட்டம், வட மாவட்டம், மாநிலங்களுக்கு ரயில்கள் சென்று வருகின்றன. பொதுமக்கள் நலன் கருதி, இந்த ரயில்வே கேட்டை அகற்றி விட்டு மேம்பாலம் கட்டித்தர வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்து வந்தனர். ஆனால் கடந்த 2015 ஆண்டுக்கு முன்பு பெரம்பலூர் புறவழிச்சாலையில் மேம்பாலம் கட்டுப்பட்டு விட்டதால் ரயில்வே கேட்டை அகற்ற வாய்ப்பில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்து. 
எனினும் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் தொடர் போராட்டத்தையடுத்து நெடுஞ்சாலை துறையினர் ரயில்வே கேட் அருகே மண் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதையடுத்து, ரயில்வே நிர்வாகமும் மேம்பாலம் கட்ட அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து மேம்பாலம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு, கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி ரயில்வே கேட் மூடப்பட்டு, ரூ.22 கோடிக்கான பணிகள் தொடங்கின.
ஆனால் 3 ஆண்டுகளாகியும் இன்னமும் நிறைவடையாமல் இருக்கிறது. இந்த மேம்பாலத்தையொட்டி இருபுறமும் அணுகு சாலை அமைக்கப்படவில்லை. இதற்காக, நிலம் கையகப்படுத்தும் பணி 3 ஆண்டுகளாக பாதியில் நிற்கிறது. ரயில்வே பாலத்தின் கீழே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டாலும், இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். அதுவும் மழைக்காலங்களில் இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படும். இதனால், வேறு பாதையில் சுமார் 5 கி.மீ தூரம் சுற்றிச்செல்கின்றனர். இந்த ரயில்வே பால்அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளரிடம் கேட்டதற்கு, கட்டுமானப் பணிகள் 85 சதவீதம் முடிவுற்றது. 
ஆனால் பாலத்தின் இருபுறமும் அணுகு சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தான் நடைபெற்று வருகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com