Enable Javscript for better performance
புதிய கல்விக்கொள்கை மூலம் குலக்கல்வியைக் கொண்டுவர முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    புதிய கல்விக்கொள்கை மூலம் குலக்கல்வியைக் கொண்டுவர முயற்சி

    By DIN  |   Published on : 05th August 2019 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிய கல்விக் கொள்கை மூலம் குலக்கல்வி திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது என்றார் ஆசிரியர் கூட்டணியின் அகில இந்தியச் செயலாளர் அண்ணாமலை.
    அரியலூரில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக ஆசிரியர் கூட்டணியின் அகில இந்தியச் செயலர் அண்ணாமலை பின்னர்  செய்தியாளர்களிடம் தெரிவித்தது: புதிய கல்விக் கொள்கைக்கு ஊதுகுழலாக தமிழக அரசு இருக்காமல், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.  புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டால் பழைய குலக்கல்வி திட்டத்தை செயல்படுத்தும் விதமாக அமையும்.  இந்த புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதைக் கண்டித்துபல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai