மருக்காலங்குறிச்சி - தண்டலை சாலைப் பணிகள் ஆய்வு

அரியலூர் மாவட்டம், மருக்காலங்குறிச்சி-தண்டலை வரை ரூ.94.72 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும்

அரியலூர் மாவட்டம், மருக்காலங்குறிச்சி-தண்டலை வரை ரூ.94.72 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பிரதம மந்திரி கிராம சாலைப் பணிகளை ஆட்சியர் டி.ஜி.வினய் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர், குருவாலப்பர் கோயில் கிராமத்திலுள்ள பொன்னேரியில் ரூ.20 லட்சம் மதிப்பில் 2,100 மீட்டர் பரப்பளவில்  நடைபெற்று வரும் கலிங்குகளுக்கு இடையே கிராவல் பரப்புதல் மற்றும் நீர் பிடிப்பு பகுதி பின்புறம் மண் கரை அமைத்தல் போன்ற பணிகளைப் பார்வையிட்டார். 
பின்னர் அவர் தெரிவித்தாவது: மழைக்காலங்களில் கலிங்குகளுக்கு ஆய்வு பணிக்கு செல்ல ஏதுவாகவும், நீர் பிடிப்பு பகுதிகளுக்கு பின்புறம் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரை அமைக்கப்படுவதால், நீர் பிடிப்பு பகுதி பாதுகாக்கப்படுகிறது. குடிமராமத்து திட்டத்தின் மூலம் நடைபெறும் பணிகளில் ஓடையின் இருபுறம் எல்லை கற்கள் நடப்பட்டு, ஓடை தூர்வாரப்படுவதால், வெள்ள காலங்களில் கீழே உள்ள பாசன நிலங்கள் பாதுகாக்கப்படுகிறது. மேலும், நீர் நிலை ஆக்கிரமிப்பு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. இதன் மூலம் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் சேமிக்கவும், விவசாய நிலங்களுக்கு போதுமான நீர் கிடைக்கவும் வழிவகை செய்யகிறது என்றார். ஆய்வின் போது, உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை,வட்டாட்சியர் குமரய்யா,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தலிங்கம், சந்தானம், உதவி செயற்பொறியாளர் சாந்தி மற்றும் பாசனதாரர் சங்க உறுப்பினர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com