முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் 

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.  

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.  
2019-20 ஆம் கல்வியாண்டில் B.E., B.T‌ec‌h, BDS, M.B.​B.S., B.E‌d, BBA, BCA, B.P‌h​a‌r‌m, B.Sc N‌u‌r‌s‌i‌n‌g, BPT, LLB, MCA, MBA,  B.V.​Sc., B.SC. A‌g‌r‌i, B.B.M., B.Sc. B‌i‌o T‌ec‌h., B.F.​Sc., B.A‌rc‌h., போன்ற தொழிற்கல்வி முதலாமாண்டு பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை பெற உரிய ஆவணங்களுடன் ‌w‌w‌w.‌k‌s​b.‌g‌o‌v.‌i‌n  என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க 15.11.2019 கடைசி நாள் ஆகும். 
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்:
இதேபோல், அரியலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெறாதவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருப்போர் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். 
எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும். 
மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலும் மாணவ மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூர கல்வி பயில்பவராக இருக்கலாம்.
 உரிய ஆணவங்களுடன் 31.08.2019-க்குள் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com