சுடச்சுட

  

  தமிழ்நாடு அரசு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க திருச்சி மண்டல கூட்டம்  அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அண்மையில்  நடைபெற்றது. 
  கூட்டத்தில் மாநிலத் தலைவர் சங்கர்பாபு பங்கேற்று,பென்சன் அரசாணை குறித்து பேசினார். கூட்டத்தில், கோரிக்கையை வலியுறுத்தி செப். 23 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது,  24 ஆம் தேதி சைதாப்பேட்டையில் உள்ள  சமூக நலத் துறை ஆணையர்  அலுவலகத்தை முற்றுகையிடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  அச்சங்கத்தின் அரியலூர் மாவட்டச் செயலர் அருணாச்சலம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர்கள் திருச்சி தியாகராஜன்,அரியலூர் பன்னீர்செல்வம், பெரம்பலூர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  கூட்டத்தில் திருச்சி,பெரம்பலூர்,அரியலூர் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு அரசு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள், மகளிர் ஊர் நல அலுவலர் சங்க நிர்வாகிகள்,மேற்பார்வையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில துணைச் செயலர் சாரதா வரவேற்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai