சுடச்சுட

  

  சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் வியாழக்கிழமை (ஆக.15) கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுச் செலவினம் , 2019-2020 ஆம் நிதியாண்டு வளர்ச்சி பணிகளுக்கான திட்ட அறிக்கை ஒப்புதல் பெறுதல், குடிநீரைச் சிக்கனமாகவும், முறையாகவும் பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதிச் செலவின விவரங்கள், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து தெரிவித்து ஒப்புதல் பெறுதல், பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி மற்றும்  உபயோகத்தைத் தடை செய்தல், உணவு பொருள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மக்கள் திட்டமிடல் இயக்கம் வெற்றிகரமாக செயல்படுத்துவது, தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது. 
  எனவே அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களவை,சட்டப்பேரவை உறுப்பினர்கள்,மகளிர் சுய உதவிக் குழுக்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai