சுடச்சுட

  

  உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில், அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்தில், முந்திரி பணப் பயிர் என்ற நிலையை மாற்றி வேளாண் பயிராக மாற்றம் செய்து,காப்பீடுத் திட்டத்தில் இணைக்க  வேண்டும்.
  உடையார்பாளையம் நகரத்தை மையபடுத்தி,  நான்குப்புறமும் சாலைகள் அமைத்து  போக்குவரத்து வசதியை மேம்படுத்த வேண்டும். உடையார்பாளையம் இலையூர் வழியாக பேருந்து வழித்தடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  கூட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் விருத்தகாசி தலைமை வகித்தார்.நிர்வாகிகள் வைத்திலிங்கம்,மாரிமுத்து  முன்னிலை வகித்தனர்.செயலர் அண்ணாமலை  வரவு செலவு கணக்கை வாசித்தார்.
   முன்னதாக துணைத் தலைவர் பெரியசாமி வரவேற்றார். நிறைவில், துணைச் செயலர் பழனிவேல் நன்றி கூறினார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai