சுடச்சுட

  

  திருமானூரில் எலி மருந்தை சாப்பிட்டஇளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார். 
  திருமானூர் பிரதான சாலையில் வசித்து வருபவர் அய்யம்பெருமாள் மகன் ராஜ்(எ) அறிவழகன் (28).  உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், விரக்தியில் கடந்த 7- ஆம் தேதி எலி மருந்தை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். 
  இதைத் தொடர்ந்து உறவினர்கள் அவரை மீட்டு,  தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அறிவழகன் உயிரிழந்தார்.இதுகுறித்து திருமானூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai