சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.16) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
   அரியலூர்  மாவட்டத்தில் ரெட்டிப்பாளையம், வெற்றியூர்,  தென்கச்சி பெருமாள் நத்தம், அங்கராயநல்லூர் (கிழக்கு) ,  சிறுகடம்பூர்,இலையூர் (மேற்கு)  ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. 
   வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறும் முகாமில், வருவாய்த்துறையின் சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai