ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் பால்குட விழா

ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு, பால்குடத் திருவிழா நடைபெற்றது.

ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு, பால்குடத் திருவிழா நடைபெற்றது.
அரியலூர் கிருஷ்ணன் கோயில் தெரு காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடந்த பால்குடத் திருவிழாவையொட்டி செட்டி ஏரிக் கரையிலுள்ள விநாயகர் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், அலகுகாவடி எடுத்து வந்து நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
தெற்குத் தெரு மற்றும் வடக்குத்தெருவில் உள்ள திரௌபதியம்மன் கோயில்கள், கபிரியேல் தெரு மாரியம்மன், சிங்காரத்தெரு மாரியம்மன், மணலேரி மாரியம்மன் கோயில்களில் நடந்த  நிகழ்ச்சிளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்து நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
இதேபோல அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர், ஜயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடம், உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாரியம்மன், செல்லியம்மன், பெரியநாயகி அம்மன், காளியம்மன் கோயில்களுக்கும்பால்குடம் எடுத்து வழிபட்டனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சுவாமி வீதி உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com