அரியலூரில் சிறுபாசன ஏரிகள் புனரமைப்பு தொடக்கம்

அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள சிறு பாசன ஏரிகள்,குளங்கள் மற்றும் குட்டைகள் ஆகியவற்றைப் புனரமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.


அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள சிறு பாசன ஏரிகள்,குளங்கள் மற்றும் குட்டைகள் ஆகியவற்றைப் புனரமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
திருமானூர் ஊராட்சி ஒன்றியம், கீழப்பழூரிலுள்ள கருங்குளம் சிறுபாசன ஏரியை ஆழப்படுத்தும் பணியை அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் தொடக்கி வைத்தார்.
அப்போது அவர் தெரிவித்தது:
ஊரகப் பகுதிகளிலுள்ள சிறுபாசன ஏரிகள், குட்டைகள் மற்றும் ஊரணிகள்  போன்ற நீர் நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கும் பொருட்டு, அவற்றைத் தூர்வாரும் பணியை தொடங்குமாறு தமிழக முதல்வர் அறிவித்தார்.அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் நிகழாண்டு 106 சிறுபாசன  ஏரிகள்,872 குட்டைகள், ஊரணிகளைப் புனரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறுபாசன ஏரிகள் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும், குட்டைகள்,ஊரணிகள் தலா ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலும் புனரமைப்பு பணி மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  தற்போது கீழப்பழூர் ஊராட்சி கருங்குளம் சிறுபாசன ஏரியை ஆழப்படுத்தி புதுப்பிக்கும் பணி தொடக்கி  வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் வரும் ஏரிகள், குட்டைகள் தூர்வாரி புனரமைக்கப்படவுள்ளன.
ஏற்கெனவே அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை சார்பில்  ரூ. 2 கோடியே 46 லட்சத்தில் 12 ஏரி மற்றும் வரத்து வாய்கால்கள் குடிமராமத்துத் திட்டப்பணிகளின் கீழ் புனரமைக்கும் பணி நடைபெற்று முடிவுரும் தருவாயில் உள்ளது. இந்தப் புனரமைப்பு பணிகளால் மழைக் காலங்களில்  ஏரி, குட்டைகளில் மழைநீர் சேமிக்கப்பட்டு, விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த ஏதுவாகும். மேலும்,  இப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் முன்னிலை வகித்தார். ஜயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என். ராமஜெயலிங்கம், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், ஆவின் துணைத் தலைவர் பிச்சமுத்து, செயற்பொறியாளர் பிரேமாவதி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com