இலிங்கத்தடிமேடு பள்ளியில் கண்காட்சி

அரியலூர் அருகேயுள்ள இலிங்கத்தடிமேடு கே.ஆர்.வி. நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


அரியலூர் அருகேயுள்ள இலிங்கத்தடிமேடு கே.ஆர்.வி. நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை ரோவர் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் வீ.ரவிச்சந்திரன் தொடக்கி வைத்து பார்வையிட்டு, இதுபோன்ற கண்காட்சியால் மாணவர்களின் சிந்தனை திறனை வளரும் என்றார்.
க.பொய்யூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி,கடுகூர் திருமுருகன் உதவிப்பெறும் தொடக்கப் பள்ளி,கோப்பிலியன் குடிகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,தலையாரி ஊராட்சி தொடக்கப் பள்ளி,கல்லங்குறிச்சி மானிய தொடக்கப் பள்ளி,மணக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ,மாணவிகள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
இலிங்கத்தடிமேடு பள்ளி தலைமை ஆசிரியர் க.ரவிச்சந்திரன் வரவேற்றார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com