குலமாணிக்கம் கிராமத்தில் திறன்வளர் பயிற்சி

திருமானூர் அருகேயுள்ள குலமாணிக்கம் கிராமத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் திறன் வளர் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருமானூர் அருகேயுள்ள குலமாணிக்கம் கிராமத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் திறன் வளர் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாண் துணை அலுவலர் ஞா.பால் ஐட்ன்சன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலைமதி, உதவி தொழில் நுட்ப மேலாளர் தமிழ்செல்வி ஆகியோர் பங்கேற்று,  கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் நன்மைகள், குழு செயல்பாட்டு முறைகள், பிரதம மந்திரி விவசாயிகள் ஓய்வூதியம் திட்டத்தின் பயன்கள் மற்றும் குழு உறுப்பினர்களுக்கு குழு பதிவேடுகள் பராமரித்தல் குறித்து விளக்கினர்.
நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்களை காணொளி காட்சி மூலம் விளக்கியதுடன், அனைவரும் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தின் மூலம் மானியத்தில் 
பாசனக் கருவிகள் பெற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com