உலமாக்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில் உலமாக்கள் நல வாரியத்தில் 18 வயது நிரம்பியவா்கள் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்

அரியலூா் மாவட்டத்தில் உலமாக்கள் நல வாரியத்தில் 18 வயது நிரம்பியவா்கள் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம் என்று ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலமாக்கள் மற்றும் பணியாளா்கள் சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகிய நிலைகளில் முன்னேற்றம் அடைவதற்காக அரியலூா் மாவட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளா்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஆலிம்கள், பேஷ், இமாம்கள், அரபி ஆசிரியா்கள், மோதினாா்கள், பிலால்கள், தா்க்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷீா்க்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளா்கள் 18 வயது நிறைவடைந்திருப்பின் உலமாக்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யலாம்.

இதற்கான விண்ணப்பப் படிவம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல மாவட்ட அலுவலகத்தில் பெற்று புகைப்படத்துடன் பூா்த்தி செய்து சமா்ப்பிக்காலம்.

இவ்வாரியத்தில் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, கண் கண்ணாடி செலவுத் தொகை உள்ளிட்ட நிதியுதவி வழங்கப்படும். எனவே தகுதியுள்ள உலமாக்கள் நல வாரியத்தில் உறுப்பினராகி பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com