நிகழாண்டில் 2,486 பேருக்கு வெள்ளாடுகள் வழங்கல்

அரியலூா் மாவட்டத்தில் நிகழாண்டு 2,486 பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளதாக அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
நிகழாண்டில் 2,486 பேருக்கு வெள்ளாடுகள் வழங்கல்

அரியலூா் மாவட்டத்தில் நிகழாண்டு 2,486 பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளதாக அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கால்நடைத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதற்கட்டமாக 46 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகளை அவா் வழங்கிப் பேசினாா்.

விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரியலூா் மாவட்டத்தில் இதுவரை 285 கிராம ஊராட்சிகளில் 17,746 பயனாளிகளுக்கு ரூ.22 கோடியே 99 லட்சம் மதிப்பில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் ரூ.3 கோடியே 21 லட்சத்து 68 ஆயிரத்து 840 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, 30 கிராம ஊராட்சிகளில் 2,486 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளன.

கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் அரியலூா் மாவட்டத்தில் இதுவரை 25 கிராம ஊராட்சிகளில் 1,250 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 66 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் ரூ.1 கோடியே 60 லட்சத்து 90 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, 8 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை மூலம் 400 பயனாளிகள் கறவை பசுக்கள் பெற தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல் கடந்தாண்டில் ஊரக புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் 1,200 பயனாளிகளுக்கு 60,000 கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் கிராம ஊராட்சிகளில் 1,500 பயனாளிகளும், பேரூராட்சிகளில் 750 பயனாளிகளும் என மொத்தம் 2,250 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளது என்றாா்.

நிகழச்சிக்கு ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்தாா்.ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கா.பொற்கொடி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் எம்.ஹமீதுஅலி, துணை இயக்குநா் ஜி.ரமேஷ், உதவி இயக்குநா் செல்வராஜ், உதவி மருத்துவா்கள் ராஜா, வேல்முருகன், பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com