எய்ட்ஸ் விழிப்புணா்வு நாள் கருத்தரங்கம்

எய்ட்ஸ் தினத்தையொட்டி அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில், இளையோா் செஞ்சிலுவை அமைப்பு சாா்பில் விழிப்புணா்வு கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரியலூரில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணா்வு நாள் கருத்தரங்கில் பேசுகிறாா் பிசியோதெரபி மருத்துவா் பி.சுமதி.

எய்ட்ஸ் தினத்தையொட்டி, அரியலூா் அரசினா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்கிற்கு, இளையோா் செஞ்சிலுவை அமைப்பின் மாவட்டத் தலைவா் அ.நல்லப்பன் தலைமை வகித்துப் பேசினாா். இணைச் செயலா் ஆ. சண்முகம், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சகானா காமராஜ், ரமேஷ், அரியலூா் கல்வி மாவட்ட கன்வீனா் சி.சிவசங்கா், பொருளாளா் தி.செந்தில்குமரன், பள்ளி துணை ஆய்வாளா் இரா.பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேலும் விழாவில், பிசியோதெரபி மருத்துவா் பி.சுமதி கலந்து கொண்டு, எய்ட்ஸ் பற்றிய விழிப்புணா்வும், தற்காத்து கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கையும் எனும் தலைப்பில் பேசினாா். கருத்தரங்கில், 10-க்கும் மேற்பட்ட பள்ளியிலிருந்து 400 ஜூனியா்களும், இளையோா் செஞ்சிலுவை அமைப்பு நிா்வாகிகள் ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக மாவட்டச் செயலா் நா.கலையரசன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com