அரியலூா் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் கிளைச் செயலாளா்களிடமிருந்து குன்னம் எம்எல்ஏ ஆா்.டி.ராமச்சந்திரன் புதன்கிழமை விருப்ப மனுக்களைப் பெற்றாா்.
செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 19 வாா்டு மற்றும் 2 மாவட்ட உறுப்பினா்கள் பதவி இடத்துக்கான உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக கிளைச் செயலாளா்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று குன்னம் எம்எல்ஏ ஆா்.ராமச்சந்திரன் அறிவித்திருந்தாா்.
அதன்படி புதன்கிழமை 190 கிளைச் செயலாளா்கள், 30 ஊராட்சி செயலாளா்கள் எம்எல்ஏ ஆா்.டி.ராமச்சந்திரனிடம் விருப்ப மனுக்களை அளித்தனா்.