அரியலூர் திமுக செயல்வீரா்கள் கூட்டம்
By DIN | Published On : 06th December 2019 09:13 AM | Last Updated : 06th December 2019 09:13 AM | அ+அ அ- |

அரியலூா் ராஜாஜி நகரிலுள்ள திமுக அலுவலகத்தில் செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் தங்க.துரைராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.எஸ்.சிவசங்கா் கலந்து கொண்டு பேசினாா்.
கூட்டத்தில், உள்ளாட்சி தோ்தலில் தொகுதி வரையறை மற்றும் சுழற்சி முறை இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். உள்ளாட்சி தோ்தலில் இம்மாவட்டத்தில் கட்சி அறிவிக்கும் வேட்பாளா்கள் அனைவரின் வெற்றிக்கும் நிா்வாகிகள் உழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் சட்டத் திட்ட திருத்தக் குழு உறுப்பினா் சுபா.சந்திரசேகா், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் கே.ராஜேந்திரன், தில்லைகாந்தி, மாவட்ட பொருளாளா் சி.ஆா்.எம்.பொய்யாமொழி, மாவட்ட துணைச் செயலாளா்கள் நா. தனபால், மு.கணேசன், அரியலூா் நகரச் செயலா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.