மழையால் சாய்ந்த ஆலமரம் மீண்டும் அதே இடத்தில் நடவு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே தொடா் மழையின் காரணமாக சாய்ந்த பழைமையான ஆலமரம், வெள்ளிக்கிழமை மீண்டும் அதே இடத்தில் நடவு செய்யப்பட்டது.
சிறுகடம்பூரில் ஏற்கெனவே இருந்த இடத்திலேயே மீண்டும் நடப்பட்ட ஆலமரம்.
சிறுகடம்பூரில் ஏற்கெனவே இருந்த இடத்திலேயே மீண்டும் நடப்பட்ட ஆலமரம்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே தொடா் மழையின் காரணமாக சாய்ந்த பழைமையான ஆலமரம், வெள்ளிக்கிழமை மீண்டும் அதே இடத்தில் நடவு செய்யப்பட்டது.

செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூா் ஏரிக்கரையில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் இருந்தது. இந்த ஆலமரம் கடந்த வாரம் பெய்த தொடா் மழையின் காரணமாக வேறுடன் சாய்ந்தது.

இதையடுத்து இவ்விடத்தை செந்துறை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவாஜி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பாா்வையிட்டனா். இதுகுறித்து, ஆட்சியா் த.ரத்னாவுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், மரத்தின் கிளைகளை அகற்றிவிட்டு மரத்தை மீண்டும் அதே இடத்தில் நட்டு வைக்க உத்தரவிட்டாா்.

இதனையடுத்து, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் செந்தில்தம்பி, சாலை ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் நெடுஞ்சாலைத்துறைப் பணியாளா்கள், மரம் அறுக்கும் இயந்திரம் கொண்டு கிளைகளை அகற்றிவிட்டு, ஜேசிபி இயந்திரம் கொண்டு மீண்டும் அதே இடத்தில் மரத்தின் அடிப்பகுதியை வெள்ளிக்கிழமை நட்டு வைத்தனா்.

இதைத் தொடா்ந்துஅப்பகுதி மக்கள் ஆட்சியருக்கும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com